தஞ்சையில் இருந்து ஆறு கி.மீ தொலைவிலும், திருவையாறில் இருந்து இரண்டு கி.மீ தொலவிலும் திருக்கண்டியூர் - ஹர சாப விமோசனப் பெருமாள்
திருத்தலம்.
அகங்காரம், ஆசை, பொறாமை, கோபம், கர்வம் இவை மனித வாழ்வினை நிர்மூலமாக்கி விடும். மனிதனுக்கு மட்டுமா?
தன்னைப் போல ஐந்து தலை கொண்ட பிரம்மாவின் கர்வத்தினை அடக்க எண்ணி, தலையை கொய்ய, அதனால் பிரம்மஹத்தி தோஷம் தாங்கியது. கொய்த சிரசும் கையில் ஒட்டிக் கொள்ள, விமோசனம் தேடி அலைந்து இத்தலம் வர, ஒட்டிய சிரசு கையை விட்டு நீங்கியதாக வரலாறு.
பாவத்தை செய்தவராக சிவபெருமான். பாதிப்புக்குள்ளானவர் பிரம்மா. பாவம் கழிந்ததற்கான சாட்சியாக நின்றவர் எம்பெருமான்.இதனை உணர்த்திடும் வகையில் அருகாமையிலே வாதி , பிரதிவாதி எதிர் எதிராக நிற்பதைப் போல, பிரம்ம தேவருக்கும் சிவபெருமானுக்கும் கோயில்கள் உள்ளன. வாதியையோ, பிரதிவாதியையோ சாராமல் சத்திய வழக்கில், சாட்சியாகப் பட்டவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ( நடு நிலை ) வகித்து எம் பெருமான் விளங்குகிறார்.
நீதி மன்றங்கள் தரும் தண்டனையை விட, அவரவர் செய்த கர்மத்தினால் விளைந்த பாவத்திற்கான தண்டனையை அவரவர்களே அனுபவித்து கழித்திட வேண்டும் என்ற தண்டனையானது மிக மிகக் கடுமையானது என்பதன் வாழ்வியல் உண்மையினை உணர்த்தும் அற்புதத் திருத்தலம் இதுவாகும்.
நம் வாழ்வில் நமது கர்மாவினால், பிறரின் சாபத்திற்கு உள்ளாகி, அதனைத் தீர்க்கும் வழியறியாது விழிப்போம்! அதற்கும் ஹரசாப விமோசனப் பெருமாள் அபயம் தந்து காத்து ரட்சிக்கின்றார், இத்தலத்துப் பெருமாளை அர்ச்சனை பரிகார முறைப்படி செய்து ( திருவிடை மருதூர் பரிகார முறைப்படி ), இவ்வாலயம் விட்டு நீங்கும் முன்பாக காலபைரவருக்கு ( நாய் ) தயிர் அன்னம் இலையில் வைத்திட வேண்டும். பைரவர் சாப்பிட்டு முடியும் வரை அங்கிருக்க வேண்டும். பைரவர் தவிர இதர ஜீவராசிகள் ( கோழி, ஆடு, ....) தொடா வண்ணம் பார்த்திட வேண்டும். பைரவர் அன்னம் சாப்பிட்டு விட்டால், பரிகாரம் குறையில்லாமல் முடிந்தது. பைரவர் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குள் எடுக்க வில்லை என்றால், அடுத்த எட்டு நாளைக்குள் மீண்டும் பரிகார அர்ச்சனை செய்து, பின் பைரவருக்கு அன்னம் வைக்க வேண்டும். தொடர்ந்து மூன்று வாரம் செய்தும், பைரவர் அன்னம் எடுக்கவில்லை என்றால், அடுத்த வாரம் திருவிடை மருதூர் சென்று பரிகாரம் செய்திட வேண்டும். மறுவாரம் இவ்வாலயம் வந்து மீண்டும் பரிகாரம் செய்ய வேண்டும்.
( நம் வாழ்வில் எத்தனையோ ஜீவ ராசிகள் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால்
இறப்பிற்கு ஆளாகி இருக்கும். அதற்கும் சேர்த்து, நாம் மனமுருகி பிராயச்சித்தம் கோர வேண்டும். மேலும், அறிந்தும், அறியாமலும் பிறரின் நல்வாழ்வினை கெடுக்கும் விதமான சாபங்கள் கொடுக்காத ஒரு மன நிலை, கோபம் கண்ணை மறைக்கும் நிலை உருவாகக் கூடாது என்று மனமுறுகி வேண்டுதல் செய்தல் வேண்டும். )
நிஜம் விலகினாலும், நிழல் விடுமா?
தொடர்ந்து தானே வரும். அதற்கு என்ன செய்ய வேண்டும்......?

No comments:
Post a Comment