Thursday, 24 January 2013


சித்தன் அருள் - 105

வணக்கம்!  சித்தன் அருளை மறுபடியும் தொடருவோம்!

கேது என்றால் கெடுதல் செய்து கொண்டு ஞானத்தை ஓட்டுபவன் என்பது பொருள்.  தூம கேது என்றால் தேசத்திற்கு ஒரு கஷ்டத்தைக் கொடுத்துப் பின்னர் சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பது பொருள்.

பழங்கால ஓலைச் சுவடிகளில் வான சாஸ்திரத்தைப் பற்றி முனிபுங்கவர்கள் சொன்ன இந்த அமுதமான வாக்கியம் இன்றளவும் நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது.  நம்பாதவர்களைக் கூட நம்ப வைக்கும் இந்த இயற்கையின் முன் அறிவிப்பை நமது பண்டைய புராணங்களிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடப் போகிறது என்று யோசித்தேன்.  பாகிஸ்த்தான் நம் மீது படை எடுக்கும் அல்லது சைனா வாலை ஆட்டி ஏதேனும் உபத்திரவத்தைத் தரும் அல்லது இயற்க்கை சீற்றம் பொங்கி மக்களை வறுமையால் வாட்டி எடுக்கும்.  பூகம்பம் தோன்றலாம்.  பயிர்கள் மழையால் நாசமடயலாம்.  ஆன்மீகப் பக்தி குறையும்.  நாட்டில் ஒழுக்கமின்மை கொடி கட்டிப் பறக்கும்.  கற்பழிப்பு, கொலை, கொள்ளை அடிக்கடி நடக்கும்.  இதைத்தவிர வேறு என்ன நடந்துவிடப் போகிறது என்று என் சிந்தையில் தோன்றியது.

ஆனால் ...........

அகஸ்தியரோ வானத்தில் வடகிழக்குத் திசையை அசையாது பார் தூம கேது பளிச்சென்று தெரியும் என்று சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார்.  நானும் வானத்தின் வடகிழக்குத் திசையைப் பார்த்தேன்.

சற்று முன்பு தோன்றியது போல் அதே வால் நட்சத்திரம் மறுபடியும் தோன்றியது.  இது முன்பு தெரிந்ததை விட சற்றுப் பெரியதாகவும் ஆனால் வெகு சீக்கிரத்தில் கண்ணில் தென்பட்டு மறைந்து விட்டது.

பிறகு பலமுறை முயற்சி செய்து பார்த்தும் கண்ணில் தென்படவே இல்லை.  அப்படியே விட்டுவிட்டேன்.

காலைப் பொழுதில் ரம்மியமானக் காட்ச்சிகள் பல தெரிந்தாலும் என் மனதில் அந்த வால் நட்சத்திரம் பற்றியச் சிந்தனைகள் அரித்துக் கொண்டிருந்தது.  ரயில் அடுத்த பிளாட்பாரத்தில் நின்றதும் ஆங்கில பத்திரிகை ஒன்றை வாங்கிப் பார்த்தேன்.  அதில் வால் நட்சத்திரத்தைப் பற்றி வானிலைச் செய்தியாக சிறு குறிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  மாலை செய்தித் தாளில் விளக்கமாகவும் வந்திருந்தது.

இதில் ஒரு திருப்தி.

நேற்றிரவு நான் கண்டது கனவல்ல.  அது உண்மைதான் என்பதால் இனிமேல் தைரியமாய் இதை வெளியில் சொல்லலாம் என்பதில் ஒரு சந்தோஷம்.  அகஸ்தியர் ஜீவநாடியில் இதுப்பற்றிக் கேட்டபொழுது "சிங்கமாய் குடிலில் யாம் விளக்குவோம்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.  அதாவது நரசிம்மப் பெருமாளான அஹோபிலக் கோயில் சன்னதியில் விளக்கமாகச் சொல்கிறேன் என்பது அர்த்தம்.

ஒரு வழியாக அஹோபில மடம் போய்ச் சேர்ந்தேன்.

அஹோபிலம்.

இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் அஹோபிலம்.   ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தன்னுள் அடக்கி இன்றைக்கும் லக்ஷ்மி நரசிம்மர் இரவு நேரத்தில் மட்டுமல்ல பலசமயம் பகலில் கூட நடமாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான தலம்.

பரந்து விரிந்த பசுமையான மலைகள், வானத்தை முட்டும் அந்த மலையின் மீது கண்ணிற்கு எட்டியதூரம் செடி கொடிகளால் போர்த்தப் பட்டு இயற்கையின் செழிப்பு இதுதான் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டும் விதத்தில் அஹோபிலம் விளங்குகிறது.

இந்த அஹோபிலத்தில் நவ நரசிம்மர் தரிசனம் காணலாம்.  கீழ் அஹோபிலம் ஐந்து வகை நரசிம்மர்ரைக் கொண்டது.  பிரஹலாத வரத லக்ஷ்மி நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஸ்ரீ சத்ரவட நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர் என்று ஐந்து வாகான நரசிம்மர் சன்னதி உண்டு.

கீழ் மலையிலிருந்து மேல் அஹோபிலம் என்பது சுமார் பத்து கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த இடம் இன்றைக்கும் பிரபலமாக விளங்குவதற்கு காரணம் ஸ்ரீ உக்ர நரசிம்ஹ சுவாமி சுயம்புவாகக் குகையில் தோன்றி அருள் பாலிப்பதாகவும், ஸ்ரீ கருடன், மகாலட்சுமி, பிரகலாதர் போன்றோர் ஆண்டாண்டுகளாக இங்கு கடும் தவம் செய்து நரசிம்ம சுவாமியை நேரில் தரிசனம் கண்டதாகவும் உள்ள புண்ணிய குகை.

இந்த மேல் அஹோபிலத்தில் உக்ர நரசிம்மர், ஸ்ரீ பாவனா நரசிம்மர், ஸ்ரீ வராஹ நரசிம்மர், ஸ்ரீ ஜ்வால நரசிம்மர், பவ நாசினி உற்பத்தி ஸ்தலம், உக்ர ஸ்தம்பம், ஸ்ரீ மாலோல நரசிம்மர், ஸ்ரீ ப்ரஹலாதர் குகை என்பது மிகவும் முக்கியமான இடம்.

அஹோபிலத்திற்கு அகஸ்தியர் என்னைப் போகச் சொன்னாரே தவிர இந்தப் புனிதமான இடத்தில் நின்று பிரார்த்தனை செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு போதும் சொல்லவில்லை.

அஹோபிலம் சென்றால் அங்குள்ள பதிமூன்று புண்ணிய இடத்தையும் கண்டுவிட்ட பிறகுதான், பின்னர் தன ஜீவநாடியில் நல்வாக்கு தருவார் என்று தோன்றியது.  மிகவும் பயபக்தியோடு முறைப்படி ஒவ்வொரு சந்நிதிக்குள் சென்று லக்ஷ்மி நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து வந்தேன்.

மலை மீது ஏற ஏற எனக்கு ஒரு திடீர் பயம் ஏற்பட்டது.

கூட்டம் அதிகம் இல்லை.  தற்காத்துக் கொள்ள எந்த ஆயுதமும் இல்லை.  துணைக்கு என்னுடன் எவரும் வரவில்லை.  இந்த மாதிரியான மலைகளுக்குச் செல்லும் பொழுது துணை இல்லாமல் செல்வது என்பது சரியல்ல என்று பின்பு தான் தோன்றியது.

மலை மீது நடக்கும் பொழுது ஜாக்கிரதையாக அழுத்தமாகக் கால்களைப் பதிக்க வேண்டும்.  பாறைகளில் வழுக்கிவிட்டால் அவ்வளவுதான், அதோகதி.  அதிர்ஷ்டம் இருந்தால் தப்பிக்கலாம்.

அந்த மலைகள், செடிகளால் நெருக்கமான மரங்களால் உண்டாக்கப் பட்டது.  எனவே துஷ்டமிருகங்கள் பல இங்கு சுதந்திரமாக உலாவிக் கொண்டு வருவதால் மிகவும் எச்சரிக்கையாகப் பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

இந்த அஹோபிலத்திற்கும் திருப்பதிக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது.  அதி சேஷனின் தலையாகத் திருப்பதியும், ஆதி சேஷனின் வாலாக ஸ்ரீ சைலமும், அஹோபிலம் ஆதிசேஷனின் மத்தியப் பகுதியாகவும் இருக்கிறது என்பதால் தான் அன்றே எனக்குத் திருப்பதியில் அஹோபிலம் சென்று வா! என்று உத்திரவு வந்தது என்று எண்ணிக் கொண்டேன்.

ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த பகுதி ஆதி சேஷனின் அமைப்பில் இருக்கும்.  மலையின் வயிற்றுப் பகுதி என்பதால் அந்த ஜ்வால நரசிம்மர் சன்னதியில் மிகவும் பக்தி ஸ்ரத்தையோடு அமர்ந்து அகத்தியரின் ஜீவ நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திரைக் கதையிலே வருவது போல் அப்படியே வரிக்கு வரி அகஸ்தியர் எடுத்துக் காட்டிவிட்டு "இது யுத்தம் நடந்த இடம்.  இங்கு எதையும் உன் பொருட்டு உரைக்க மாட்டேன்.  இங்கிருந்து சில அடி தூரத்தில் உகிர ஸ்தம்பம் ஒன்று உண்டு.  அந்த ஸ்தம்பத்தின் அருகில் நரசிம்மரின் இரண்டு பதங்கள் இருக்கும்.  அந்த பாதத்தை தொடு.  ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்புத் தன்மை உன் கைக்குக் கிடைக்கும்.  அங்கு அமர்ந்து அகத்தியனை நோக்கி வணங்கு.  நீ கேட்க்கும் அத்தனை கேள்விகளுக்கும் நரசிம்மர் சுவாமியின் பாதத்திலேயே யாம் பதில் உரைப்போம்" என்றார்.

அகத்தியர் சொன்னபடியே உக்ர ஸ்தம்பத்திலிருந்து கீழே பார்த்தேன்.  ஒரு இரும்பினால் ஆன கம்பம் இருந்தது.  அதனடியில் ஸ்ரீ நரசிம்மரின் இரண்டு பாதங்களும் இருந்தன.

அந்த இடத்திற்கு வந்து பவ்யமாக அந்தப் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு நாடியைப் பிரித்து பார்க்கும் முன் திடீரென்று ஒரு இனம் புரியாத மிருகத்தின் சப்தம் என் காதில் கேட்ட்து.

வியர்த்து வெலவெலத்துப் போனேன்.  ஆட்கள் நடமாட்டம் வேறு பக்கம்.  நான் அமர்ந்திருக்கும் இடத்தின் பக்கம் ஒருவர் கூட இல்லை.  துஷ்ட மிருகங்கள் அந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் என்று ஏற்கனவே பலர் சொல்லி இருந்ததால் பயம் அளவுக்கு மீறி அதிகரித்தது.

அப்படி ஏதேனும் வந்துவிட்டால் எப்படித் தப்பி ஓடுவது என்று அச்சம் ஏற்பட்டது.  சுற்று முற்றும் பார்த்தேன். எந்த வழியும் எனக்குத் தோன்றவில்லை.  அப்படியொரு துர்பாக்கியம் ஏற்பட்டால் இதற்கு வேறு எதுவும் செய்யமுடியாது.  அப்படித்தான் என் விதி முடிய வேண்டும் என்று இருந்தால், அகத்தியர் தான் இதற்கு முழுப் பொறுப்பு என்று பயத்தின் காரணமாக அகத்தியரைச் சபிக்கவும் செய்தேன்.

சுமார் அரை மணி நேரம் அந்தக் கொடிய மிருகத்தின் சப்தம் விட்டு விட்டு எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ஒருவர் கூட என் கண்ணில் தென்படவே இல்லை.  ஒரு வேளை அவர்களுக்கு விஷயம் தெரிந்து பாதுக்காப்பான இடத்திற்குச் சென்று விட்டார்களோ என எண்ணிக் கொண்டேன்.

அந்த இடத்தில் நான் வந்த நேரம் சற்று இருள் கவ்வும் நேரம்.  காடுகளில் மலைகளில் இந்த இருள் கவ்வும் நேரத்தில் தான் இரைத் தேடி மிருகங்கள் புறப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இங்கும் அப்படி இரையைத் தேடி துஷ்ட மிருகம் ஏதாவது வந்துவிட்டதா? என்ற கிலி என்னைப் பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஒரு வழியாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு நாடி படிக்க ஆரம்பித்தேன்.

முதல் பத்து நிமிடம் நாடியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.  சரிதான் அகத்தியரும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று "லக்ஷ்மி நரசிம்மா என்னைக்  காப்பாற்று" என்று அந்த இரும்பினால் மூடப்பட்டிருந்த கம்பத்தை மிகப் பலமாகப் பிடித்துக் கொண்டேன்.

நான் படிக்க இருந்த ஜீவநாடி அந்த நரசிம்மரின் பாதத்தின் மீது கன்னா - பின்னாவாக விழுந்து கிடந்தது.  எவ்வளவு நேரம் நான் அப்படி அந்தக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருந்தேனோ எனக்குத் தெரியாது.  யாரோ ஒருவர் என்னைத் தட்டி எழுப்பிய பின்பு தான் சுய நினைவுக்கு வந்தேன்.

தெலுங்கில் கேட்டார், நான் யார் என்று!

நான் எல்லா விஷயத்தையும் தமிழில் சொன்னேன்.  நான் தமிழில் பேசிய பின்பு அவரும் தமிழில் பேச ஆரம்பித்தார்.  எனக்கு பெரும்பலம் கிடைத்தது போன்று இருந்தது.  "அந்த மிருகம் என்ன மிருகம்? அதன் சப்தம் கொடூரமாக இருந்ததே" என்றேன்.  நடந்த கதையைச் சொல்லி "அது காட்டு ஓநாய் சப்தம்.  சில நாட்களாக இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறது.  நீங்கள் தப்பித்தீர்களா?" என்றார் அவர்.

"ஓநாயா?" என்றேன்.

"ஆமாம். பெரும்பாலும் ஓநாய் பயங்கரமான துஷ்ட மிருகம்.  சிங்கம், புலிக்கு முன்னால் தைரியமாகச் செல்லும்.  பயம் கிடையாது.  பொதுவாக அவை கூட்டம் கூட்டமாகத் தான் செல்லும்.  அவற்றில் ஏதோ ஒன்று கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக வந்து விட்டது போலும்.  நான்கு நாட்களாக அதற்கு தீனி கிடைக்கவில்லை.  கோபத்தில் இங்கு வருகிற போவோரைக் கண்டால் கடித்துக் குதறிவிடுகிறது.  "பசி" வந்தால் ஓநாயகளுக்குக் கொஞ்சமும் தாங்காது.  அதனைப் பிடித்து உள் காட்டு மலைக்குள் கொண்டு விட முயற்சி செய்தும் பயனில்லாமல் போய் விட்டது" என்று ஒரு கதையை சொல்லி முடித்தார்.

"நல்ல வேளை தப்பித்தோம்" என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனக்குத் துணையாக வந்தவரிடம் "பக்கத் துணையாக கீழ் அஹோபில மடம் வரை வரமுடியுமா?" என்று கேட்டேன்.

"எந்த துஷ்ட மிருகமும் இனி இங்கு வராது.  கோயிலைச் சேர்ந்தவர்கள் இந்நேரம் அதனை தீபந்தத் துணை கொண்டு விரட்டியிருப்பார்கள்.  இனி நீங்கள் மிகத் தைரியமாகக் கீழ் மலைக்குச் செல்லலாம்" என்று தைரியம் கொடுத்து செல்ல முயற்சித்தார்.

அவரைத் தடுத்து நிறுத்தி "இங்கிருந்து தனியே செல்ல பயமாக இருக்கிறது.  மனிதக் கூட்டம் யாதேனும் வந்தால் அவர்களோடு சென்று விடுகிறேன்.  அதுவரை எனக்குத் துணையாக இருக்கும்படி" காலில் விழாக் குறையாக வேண்டிக் கொண்டேன்.

அரை குறை மனதோடு ஒப்புக் கொண்ட அவர், அந்த உக்கிர ஸ்தம்பத்தின் கற் பாதத்தில் விழுந்து கிடந்த அகத்தியர் நாடியைக் காட்டி "இதை இங்கேயே விட்டு விட்டுப் போகிறீர்களே.  இதைப் படித்துவிட்டு தானே இங்கிருந்து செல்ல வேண்டும்.  அதை முதலில் அழகாக எடுத்துப் படியுங்கள், பின்பு நான் வருகிறேன்" என்று சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

பயத்தின் காரணமாக நான் ஜீவநாடியை அடியோடு மறந்து போனேன்.  சுட்டிக் காட்டி நாடியைப் படிக்கச் சொன்ன இவர் யார்? என்று பிரமித்து நின்றேன்.

சித்தன் அருள் .............. தொடரும்!

சத்துணவுத்திட்டம் தந்த மக்கள் திலகத்திற்கு நினைவாஞ்சலிகள்.

மக்கள் திலகத்தின் திரைப்படப்பாடல்கள் சிலவற்றைத் தருகிறேன். பாடலையும், பாடல் இடம் பெற்ற படத்தையும் கண்டுபிடியுங்கள். முடியாமல் போனாலும் பரவாயில்லை. என்ன முத்தான பாடல்கள் என்று ரசித்து விட்டாவது போங்கள்

*******
பாடல்.1

நிழல் வேண்டும்போது மரம் 
ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை
ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு

உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் வழியாகும்
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும் 

*******

பாடல்:2

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்

*******
பாடல்:3

கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோயில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை

*********

பாடல்:4

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

***********

பாடல்:5

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
அன்று இல்லாமை நீங்கி எல்லாரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

***********

பாடல்:6

மலைபோலே சோதனை யாவும் 
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து 
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்


***********

பாடல்:7

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில்
பிழைக்கச் சொல்வேன் அவர் 
உரிமைப் பொருட்களைத் தொட மாட்டேன்

************

பாடல்:8

பூமியில் நேராக வாழ்பவர் எல்லாரும் 
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா

***********

பாடல்:9

உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வியர்வையில் வயிறை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்

**********

பாடல்:10

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையை கட்டி வைத்தான்
அந்த கோட்டைக்கு விளக்காக
அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம்
அறிவுக்குப் பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தை கெடுத்து வைக்கும் - மனிதனின்
அழிவுக்கு வழிவகுக்கும்

******************

சத்துணவுத்திட்டம் தந்த மக்கள் திலகத்திற்கு நினைவாஞ்சலிகள்.

Tuesday, 22 January 2013

யுவகிருஷ்ணா: இண்டர்நெட்டுக்கு வயது முப்பது

யுவகிருஷ்ணா: இண்டர்நெட்டுக்கு வயது முப்பது: ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வ...

ஒரு வீடியோ படமா இமெயிலில் அனுப்பி வை . புகைப்படங்களா? உடனே அனுப்பு இமெயிலில்.எந்த கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? இமெயிலில் அனுப்ப சொல்லுங்கள்..

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படி கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இமெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது . தனி நபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிருவனங்களிடயிலான தகவல் பரிமாற்றமாகட்டும் இப்போது இமெயில் சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது .

இந்த இமெயில் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர் என்று நினைத்து இருப்பிர்கள்..நீங்கள் நினைத்தது உண்மைதான் . அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர் ...அதுவும் 14 வயதில் இமெயிலை கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை ஆவர்.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
 — 

Friday, 18 January 2013


om pramathaganapataye namah punnag patram samarpayaami
om panchasyaganapataye namah jaajipatram samarpayaami
om gajasya ganapataye namah sevantikaapatram samarpayaami
om dhira ganapataye namah sugandharaajpatram samarpayaami
om kandarpaganapataye namah mallikapatram samarpayaami
om shaktiganapataye namah champakapatram samarpayaami
om veeraganapataye namah ketakipatram samarpayaami
om viswaksenganapataye namah bakulpatram samarpayaami
om aamodganapataye namah paatali patram samarpayaami
om rudraganapataye namah dronpatram samarpayaami
om vignaganapataye namah rasaalpatram samarpayaami
om ekdanta ganapataye namah pravaal patram samarpayaami
om duritharaganapataye namah kamal patram samarpayaami
om lambodarganapataye namah kallhar patram samarpayaami
om prasaad ganapataye namah nilotpala patram samarpayaami
om bhaktavastal ganapataye namah dattur patram samarpayaami
om brahm ganapataye namah daadimi patram samarpayaami
om visnu ganapataye namah paarijaat patram samarapayaami
om esha ganapataye namah uudhikaa patram samarapayaami
om kshiraprasaad ganapataye namah karaveer patram samarpayami
om sankasthara ganapataye namah swetaark patram samarpayami

Thursday, 17 January 2013

tipsof today

1. Rubber bands last longer when refrigerated.
2. Peanuts are one of the ingredients of dynamite.
3. There are 293 ways to make change for a dollar.
4. The average person's left hand does 56% of the typing.
5. A shark is the only fish that can blink with both eyes.

6. There are more chickens than people in the world.
7. Two-thirds of the world's eggplant is grown in New Jersey.
8. The longest one-syllable word in the English language is "screeched."
9. On a Canadian two dollar bill, the flag flying over the Parliament building is an American flag.
10. All of the clocks in the movie "Pulp Fiction" are stuck on 4:20.

மந்திரம் ஓதுவதற்கு எது தேவை?




      ல்லா மத போதனைகளும் ஆலமரத்தைப்போல்  பல கிளைகளையும் இலைகளையும் மொட்டுகளையும் மலர்களையும் பிஞ்சுகளையும் காய்களையும் கனிகளையும் விதைகளையும் வேர்களையும் விழுதுகளையும் அடக்கியதுதான். அதில் நாம் எதையும் பிரித்தெடுத்து அவை சார்ந்த நன்மைகளுக்கு உபயோகிக்கலாம்.

அதுபோலவே, வானியல், ஜோதிடம், எண் கணிதம், வேதியியல், கணிதவியல், வடிவியல் போன்ற பல கலைகளையும் ஒன்றிணைத்து- மந்திர, தந்திரங்களை உபயோகித்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். சொல்லொணா துயரங்களில் நாம் ஆட்படும்போது அதிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுபவை யந்திரங்கள் என்றால் மிகையல்ல.

கண்ணேறுபடுதல்- கண்திருஷ்டி என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது. உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதனை பொதுக்கருத்தாக எண்ணி சென்னை மாநகராட்சி கண்ணில் படும் சுவரிலெல்லாம் வண்ணமயமான காட்சிகளை வாரி இரைத்துள்ளனர். இதைக் கண்டு சென்னை மாநகரம் பெருமிதம் கொள்கிறது. குப்பைமேடுகள் திடீரென தோன்றினாலும் அதன் பின்னும் அழகிய வண்ணவண்ண காட்சிகள்! அதிலும் பல மந்திர- தந்திர- யந்திர காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இதை பிற மாநகராட்சிகள் கடைப்பிடித்தால் வாஸ்து குறைகள் அகன்றுவிடும்.

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது அனுபவ பழமொழி. ஒரு நாட்டுப் புறப் பாடலைப் பாருங்கள்.

"கண்ணான கண்ணனுக்கு
கண்ணூறு பட்டுச்சுன்னு
சுண்ணாம்பும் மஞ்சளும்
சுத்தியெறி கண்ணனுக்கு
மிளகாயும் உப்பும்
வீசியெறி கண்ணனுக்கு.'

பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, குழந்தையின் தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.


ஜெர்மனியில், கால்நடைகளுக்கு ஆத்மா இல்லை என்றும்; எனவே அது அந்த எஜமானர்களுக்கும் வீட்டாருக்கும் வரும் தீவினைகளையும் ஏவல்களையும் தடுத்து நிறுத்திவிடும் என்றும் நம்புகின்றனர். நாமும் சனியின் பார்வை, கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் தொல்லைகள் விடை கொடுக்கும்.

தீய பார்வையுடையோர் கால்நடைகளைப் பார்ப்பதால் அவற்றுக்கு நோய் உண்டாகும் என்பார்கள். பசுக்கள் திடீரென்று பால் கறப்பதைக் குறைக்கும். இதற்குப் பரிகாரமாக சங்கஞ்செடியின் முள்ளை கிளையுடன் ஒடித்து வந்து, பால் கொடுக்கும் காம்பில் தடவி மந்திரம் சொல்வார்கள். நொச்சி இலையை கிளையோடு தடவினாலும் கண் திருஷ்டி அகன்றுவிடும். இவையாவும் கால்நடை மருத்துவர்கள் உருவாவதற்குமுன் ஈடேறியவை. எப்படியாவது உயிரையும் மிருகத்தையும் காப்பாற்ற, "பட்ட கண்ணு, பாழுங்கண்ணு, கொடுங்கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒரு கண்ணும் படக்கூடாது; பட்டிருந்தாலும் விலகிப்போ' என ஓதுவார்கள்.

"ஓம் மாதங்கி, ஓம் பரமேஸ்வரி, பார்வதி, லட்சுமி, கொம்போடே வந்த கோமாரி, அழல் வெக்கை, சீத வெக்கை தோன்றும் எப்பேற்பட்ட வியாதியெல்லாம் நான் ஓதிய தண்ணீரோடு போகப் போக சுவாகா' என்று மந்திரம் சொல்லி மாடுகளுக்குத் தண்ணீரைப் பருகச் செய்வார்கள்.

புல்லும் தண்ணீரும் ஓதிக்கொடுக்க கால்நடை யந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த யந்திரத்தை மாட்டுத் தொழுவங்களில் எழுதி வைத்தால் மாடுகள் காணாமல் போவதில்லை. புல் மேயச் சென்ற மாடுகள் மாலையில் தொழுவம் வந்துவிடும்.

மாதர்களுக்கு...


சிலருக்கு குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் சரியாகச் சுரப்பதில்லை. திருஷ்டி ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அதற்கான எண் யந்திரத்தை வெள்ளித் தகட்டில் சிறிதாக எழுதி, இடுப்பில் தாயத்தாகக் கட்டிக் கொண்டால் திருஷ்டிகள் அகன்றுவிடும். அடிக்கடி அழுத பிள்ளையும் சுகம் பெறும். இதை வெள்ளை அட்டையில் எழுதி வைத்துக் கொண்டாலும் போதுமானது.

பிரசவ நாளில் அந்த அறையில் சிறிது பாலும் வெள்ளை சர்க்கரையும் கலந்து வைத்து, பிரசவம் முடிந்ததும் அந்தப் பாலை அரச மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால், பிரசவகால திருஷ்டிகளிலிருந்து விடுபடலாம்.

மந்திரம் ஓதுவதற்கு எது தேவை?
சிவசக்தி மந்திரம் ஓதுவதற்கு ருத்திராட்ச மாலை.

விஷ்ணு மந்திரம் ஓதுவதற்கு கிருஷ்ண துளசி மாலை.

பண வரவுக்கு 30 ருத்திராட்ச மாலை.


மோட்சம் அடைய- 50 ருத்திராட்ச மாலை.


பொது ஆசைகள் நிறைவேற 27 ருத்திராட்ச மாலை.


சிற்றின்பச் சிறப்பு பெற 54 ருத்திராட்ச மாலை.


எல்லா எண்ணங்களும் நிறைவேற 108 ருத்திராட்ச மாலை.


பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக உலகளாவிய எச்சரிக்கை உலா வருகிறது. சாஸ்திர, சம்பிரதாயமாக என்ன செய்யலாம்?


வீட்டு விலக்கான பெண்கள் முதல் நான்கு நாட்கள் கலவியில் ஈடுபடக் கூடாது.


பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூசம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும் உடலுறவு வேண்டாம். பிதுர் திதி மற்றும் கிரகணத்தன்றும் வேண்டாம்.

பெண் குழந்தை பிறக்க: விலக்கிற்குப்பின் 5, 7, 9, 13-ஆம் நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் மகவு, (7 மற்றும் 11-ஆவது நாளில் உறவு கொண்டால் குடும்பத்திற்குக் கேடான பெண் குழந்தை பிறக்கும் என்பது பொதுக் கருத்து.)

ஆண் குழந்தை பிறக்க: 6, 8, 10, 12, 14, 16-ஆவது நாட்களில் உறவு கொண்டால் ஆண் மகவு பிறக்கும். 8, 14-ஆவது நாள் உறவில் பிறக்கும் குழந்தை கல்வியில்- திறமையில்- புத்தியில் ஜொலிக்குமாம்.
12, 16-ஆம் நாளில் இணைந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமாம்.

Wednesday, 16 January 2013

- ஹர சாப விமோசனப் பெருமாள்





தஞ்சையில் இருந்து ஆறு கி.மீ தொலைவிலும், திருவையாறில் இருந்து இரண்டு கி.மீ தொலவிலும் திருக்கண்டியூர் - ஹர சாப விமோசனப் பெருமாள்
திருத்தலம்.

அகங்காரம், ஆசை, பொறாமை, கோபம், கர்வம் இவை மனித வாழ்வினை நிர்மூலமாக்கி விடும். மனிதனுக்கு மட்டுமா?

தன்னைப் போல ஐந்து தலை கொண்ட பிரம்மாவின் கர்வத்தினை அடக்க எண்ணி, தலையை கொய்ய, அதனால் பிரம்மஹத்தி தோஷம் தாங்கியது.  கொய்த சிரசும் கையில் ஒட்டிக் கொள்ள, விமோசனம் தேடி அலைந்து இத்தலம் வர, ஒட்டிய சிரசு கையை விட்டு நீங்கியதாக வரலாறு.

பாவத்தை செய்தவராக சிவபெருமான். பாதிப்புக்குள்ளானவர் பிரம்மா. பாவம் கழிந்ததற்கான சாட்சியாக நின்றவர் எம்பெருமான்.இதனை உணர்த்திடும் வகையில் அருகாமையிலே வாதி , பிரதிவாதி எதிர் எதிராக நிற்பதைப் போல, பிரம்ம தேவருக்கும் சிவபெருமானுக்கும் கோயில்கள் உள்ளன. வாதியையோ, பிரதிவாதியையோ சாராமல் சத்திய வழக்கில், சாட்சியாகப் பட்டவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ( நடு நிலை )  வகித்து எம் பெருமான் விளங்குகிறார்.

நீதி மன்றங்கள் தரும் தண்டனையை விட, அவரவர் செய்த கர்மத்தினால் விளைந்த பாவத்திற்கான தண்டனையை அவரவர்களே அனுபவித்து கழித்திட வேண்டும் என்ற தண்டனையானது மிக மிகக் கடுமையானது என்பதன் வாழ்வியல் உண்மையினை உணர்த்தும் அற்புதத் திருத்தலம் இதுவாகும்.

நம் வாழ்வில் நமது கர்மாவினால், பிறரின் சாபத்திற்கு உள்ளாகி, அதனைத் தீர்க்கும் வழியறியாது விழிப்போம்! அதற்கும் ஹரசாப விமோசனப் பெருமாள் அபயம் தந்து காத்து ரட்சிக்கின்றார், இத்தலத்துப் பெருமாளை அர்ச்சனை பரிகார முறைப்படி செய்து ( திருவிடை மருதூர் பரிகார முறைப்படி ), இவ்வாலயம் விட்டு நீங்கும் முன்பாக காலபைரவருக்கு ( நாய் ) தயிர் அன்னம் இலையில் வைத்திட வேண்டும். பைரவர் சாப்பிட்டு முடியும் வரை அங்கிருக்க வேண்டும். பைரவர் தவிர இதர ஜீவராசிகள் ( கோழி, ஆடு, ....) தொடா வண்ணம் பார்த்திட வேண்டும். பைரவர் அன்னம் சாப்பிட்டு விட்டால், பரிகாரம் குறையில்லாமல் முடிந்தது. பைரவர் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குள் எடுக்க வில்லை என்றால், அடுத்த எட்டு நாளைக்குள் மீண்டும் பரிகார அர்ச்சனை செய்து, பின் பைரவருக்கு அன்னம் வைக்க வேண்டும்.  தொடர்ந்து மூன்று வாரம் செய்தும், பைரவர் அன்னம் எடுக்கவில்லை என்றால், அடுத்த வாரம் திருவிடை மருதூர் சென்று பரிகாரம் செய்திட வேண்டும். மறுவாரம் இவ்வாலயம் வந்து மீண்டும் பரிகாரம் செய்ய வேண்டும்.

(  நம் வாழ்வில் எத்தனையோ ஜீவ ராசிகள் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால்
இறப்பிற்கு ஆளாகி இருக்கும். அதற்கும் சேர்த்து, நாம் மனமுருகி பிராயச்சித்தம் கோர வேண்டும். மேலும், அறிந்தும், அறியாமலும் பிறரின் நல்வாழ்வினை கெடுக்கும் விதமான சாபங்கள் கொடுக்காத ஒரு மன நிலை, கோபம் கண்ணை மறைக்கும் நிலை உருவாகக் கூடாது என்று மனமுறுகி வேண்டுதல் செய்தல் வேண்டும். )

நிஜம் விலகினாலும், நிழல் விடுமா?

தொடர்ந்து தானே வரும். அதற்கு என்ன செய்ய வேண்டும்......?

Monday, 14 January 2013

900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

கருத்தூட்டம்(feedback):
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.





மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல்

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!! 

இந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;

நந்தன & விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை; இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை.

27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை,

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;

5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.

மருத்துவ குணங்கள்:மஞ்சள் (மூலிகை) மகிமை

மஞ்சளின் மருத்துவ குணம் !!!

"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அது தெரியாதவர்களுக்கும் தெரிய ஒரு வாய்ப்பாக அமையும் "

நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

மஞ்சள் (மூலிகை) மகிமை

மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது.மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

மஞ்சளின் வகைகள்:
1. முட்டா மஞ்சள்
2. கஸ்தூரி மஞ்சள்
3. விரலி மஞ்சள்
4. கரிமஞ்சள்
5. காஞ்சிரத்தின மஞ்சள்
6. குரங்கு மஞ்சள்
7. காட்டு மஞ்சள்
8. பலா மஞ்சள்
9. மர மஞ்சள்
10. ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்:

முட்டா மஞ்சள்

இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள்:

இது வெள்ளையாக , தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்:

இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்:

சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.

*பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

*சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.

*உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.

*பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

*வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.

*இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.

*நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ குணங்கள்:

1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
*
2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
*
3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
*
4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
*
5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
*
6. "மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்".
*
"மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்".
*
7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்". தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
*
8. "மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்"
*
9. " மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்"

10. "மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்"

11. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.

12. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.

13. பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.

14. பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.


15. மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.


மேலும் சில தகவல்கள்:


1. மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

2. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.


3. மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது.


4. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன..

யோக யாத்ரா


யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது
இறைவனை நேரில் கண்ட ஆங்கிலேயர் பற்றிய இந்த நிகழ்வினை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இதை இங்கே பதிவு செய்கிறேன்.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்ச்சியின் கீழ் இந்திய இருந்தது.ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கலோனல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்திகொண்டிருந்தார்.

கலோனல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கலோனிலடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.

கலோனலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார், ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒழித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டார்.

துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கலோனலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் லாகுருத்ரி அனுஷ்ட்டான் மந்திரத்தை தொடர்ந்து ௧௧ நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர்.




கலோனலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுபித்து தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்புகிறார்.

லகுருத்ரி அனுஷ்ட்டான மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கலோனலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது : போர்க்களத்தில் இருந்து
தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து புறங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல வியலாதவாறு சிக்கி கொண்டோம் நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன்,அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் கொண்டிருந்தார் மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தானவிதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர் , அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேரெதிராக மாறி வெற்றியை பெற்றோம்,இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனைஉடைய கூறிய ஆயுதமே,அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.




இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கலோனலின் மனைவி கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிந்தன, அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார்.

சில வாரங்களுக்கு பின் கலோனல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார், கலோனல் மற்றும் அவர் மனைவியும் தற்பொழுது சிவ பக்தர்களாக விளங்கினர்.

1883 ஆம் ஆண்டு கலோனல் மற்றும் அவர் மனைவி ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர், இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது, பிரிட்டிசாரால் கட்டப்பட்ட ஒரே ஆலயமாகும்.

கலோனல் மனைவி ஐரோப்பா திரும்பும்போது தனது வீட்டிலேய சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து இறுதிவரை வழிபடபோவதாக கூறினார்.




இந்த பிரபஞ்ச சக்திதான் கிருஷ்ணன் சிவன் தாய்துர்க்கை மற்றும் தன்னை அறிந்த சத்குரு நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு தேவை பிரஹலாதன் ,துருவா,ஆருணி,உபமன்யு இன்னும் பலரும் இதனை அடைந்துள்ளனர்,ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கு நடக்க முடியாததாக தொடரும் ஆனால் இன்றும் கூட பக்தர்கள் கடவுளிடமிருந்தும் குருக்களிடமிருந்தும் உதவிகளை பெறுகின்றனர்,காரணம் தகர்க்க முடியாத நம்பிக்கை மட்டுமே
 

Wednesday, 9 January 2013

குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி குருவாயூர்


நாராயணீயம்

குருவாயூரப்பனே அப்பன் என, திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடலை முன்பொரு பதிவில் பார்த்தோம் அல்லவா, இந்தப்பதிவில், ஸ்ரீகிருஷ்ணன் புகழ் பாடும் நாராயணீயம் பற்றிப் பார்ப்போம். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தினைப் பொழியும் நாரயணீயமதில் அத்வைத பக்தியில் ஆழ்ந்து திளைத்திடலாம்.

நாராயண பட்டாத்ரி
 என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்டவை இப்பாடல்கள். தன் உடலைத் தானே சுமந்து அதன் உபாதைச் சுமைகளால் மனம் நொந்து, துயர் தீர வழி யாதெனத் தேடலின் விளைவுகள் இப்பாடல்கள். இப்பாடல்களை பாடியபின் பட்டாத்ரி அவர்களின் துயர் தீர்ந்தது. இப்பாடல்களைப் படிப்போருக்கும் அதுபோல துயரெலாம் களைய குருவாயூரப்பன் துணையிருப்பானாக.

குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி 
குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு
 
கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்!

மணிகள் முழங்கட்டும், 
மங்களம் பெருகட்டும்,
 
கலியுக வரதன் கார்மேக வண்ணன்
 
கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே!


ஸ்ரீமந் நாரயணீயம் சுலோகத் தொகுதிகளை இங்கே படிக்கலாம். அவற்றில் இருந்து முதல் தசகத்தினை இங்கே தமிழில் படித்துப் பார்க்கலாமா?

தசகம் 1: சுலோகம் 1

எல்லா இடத்திலும் நிறைந்தது,
காலம் மற்றும் இடத்தினில் குறுகாதது, 
மெய்யான, எல்லையில்லா ஆனந்தம், 
தூய மெய்ஞானம் பரப்பிரம்மம்! 

கணக்கிலா மறைகள் உரைசெய்திட்டினும்,
கண்டு தெளிந்திட கடினமானதும், தெளிந்திட
உன்னதக் குறிக்கோளான வீடுபேறாகவே விளைந்தது!

அதுவே, இதோ, நம்கண் முன்னே குருவாயூரினில் திகழ்வது,
ஆகா, என்ன அற்புதம்! இஃதே மனிதரின் பாக்கியமன்றோ!

~~~~
கேட்டதைக் கொடுப்பவனாம் கீதையின் நாயகன் குருவாயூர் கண்ணனை பரப்பிரம்மம் என இப்பாடல் சொல்கிறது. பிரம்மமானது உருவம் என்ற வரையறைக்கு உட்பட்டதா என்கிற கேள்வி எழலாம். பிரம்மம், அதாவது குணங்கள் இல்லாத நிர்குண பிரம்மம், எப்படி நம் கண்முன்னே திகழ முடியும்?

மேலே எப்படி என்கிற கேள்வியினை சற்றே மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். கண் முதலான புலன்களால் துயத்திடும் பொருளனுபவம், எப்போதும் வரையறைக்கு உட்பட்ட பொருட்களையே துய்த்திட இயலும். இவை சாதாரண, நிலையிலா இன்பத்தினையே தந்திட இயலும். அப்பொருள் இல்லையேல் அவ்வின்பம் இல்லை. நிலையான பேரின்பத்தினைத் தருவது பரப்பிரம்மமாக மட்டுமே இருக்க இயலும். அப்படிப்பட்ட பிரம்மம் குருவாயூரினில் திகழ்ந்திட, அப்பேரின்பத்தினைக் கண்டு களித்திட இவ்விரு கண்களால் மட்டுமே இயன்றிடுமா?

உபநிடதமும் சொல்லும்:
குருவின் துணையுடன் மனதால் மட்டுமே காணக்கூடியது பிரம்மம். அதில் வேற்றுமை என்பதே இல்லை. - பிரஹதாரண்யக உபநிடதம் 4.4.19
~~~~

தசகம் 1: சுலோகம் 2
பிரம்மம், மானிடப்பிறப்பு, பக்தியோகம் மற்றும் ஸ்ரீமத்
பாகவதமென,
 கிடைத்தற்கரிய பொருட்கள் நான்கிருப்பினும் 
நெய்யிருக்க வெண்ணையைத் தேடி அலைபவர் ஆயிரம்!
 
தந்திரங்களையும் 
மந்திரங்களையும் தரிசனங்களையும் நம்பித் தம்பொழுதை வீணாக்கியவரே அவரெல்லாம்! 
நாமெல்லாம் இங்கே திடமாய் மனதில் முழுதாய்
 
குருவாயூரப்பனையே நாடிடுவோம்! - அவனே,
 
எல்லாப் பொருட்களிலும் உறைபவன்,

எல்லாக் குறைகளையும் களைபவன்.

~~~~
இப்படியாகச் சொல்லி, அடுத்த வரும் சுலோகம் குருவாயூரப்பனின் திருஉருவத்தினை எடுத்தியம்புகிறது.
~~~~
தசகம் 1: சுலோகம் 3

சாத்வ குணத்தின் தூய வெளிப்பாடே நின்
திருவுருவமென
 வேதவியாசரின் சொற்களும்
பலமுறை ஒலித்திடுமே.
 
சச்சிதானந்தப் பேரொளியில் திகழும் பரமன்
 
செவிக்கும் மனதுக்கும் இன் அமுதமேயாம்.
 
கைக்கொள்ள எளிதாய் கிடைத்ததென்றே
 
அருள்பெற்ற அடியார் யாரும் உரைப்பரே.


~~~~
ஒப்பிலா பிரம்மத்தினைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது, அடுத்த சுலோகம்!
இரண்டுக்கும் பொதுவானதை, அழகாகப் பட்டியலிடுகிறது:

தசகம் 1: சுலோகம் 4

பிரம்மம் எனும் ஆழமான பெருங்கடல் செயலற்றதாம்,
எப்போதும் 'நிறை'ந்தாம்,
 
ஆனந்தம் தரும் அமுதினைக் கொண்டதாம்,
 
எண்ணிடலடங்கா விடுபெற்ற ஆன்மாக்களை

தன்னிடத்தே முத்துக்களாய் கொண்டதாம்,
 
தூய சாத்வகுணமே வெள்ளை அலைகளாய் வீச,
 
எல்லையிலாமல் எல்லாமுமாய் ஆனவனே
 
தனித்தனியென இல்லாமல்
முழுமையாய் இருப்பதென்னே!


~~~~
தசகம் 1: சுலோகம் 5
ஆதி அந்தமில்லாதவனே, 
செயலற்றதாய், பிரம்மமாய் இருப்பினும்,
 
மாயைதனை எம்மேல் வீசும்
 
தொழில்கொண்டதேனோ வைகுந்தனே!
 
தூய அறிவால் இடரேதும் இலாது,
சத்வகுணமே நிறைந்திட, தூய தெளி தேனே!

~~~~~~~~~~~~

செயலே இலாமால் மாயைதனை எப்படி விளைவிக்க இயலும்?
காந்தம் போலவோ? தன்னிடம் எந்த அசைவும் இல்லாமல், தன் வசம் இரும்பை இழுப்பதுபோலவோ!
உபநிடதமும் சொல்லும்:
பிரகிருதி அல்லது இயற்கையினை மாயை அல்லது தோற்றமயக்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதனை நடத்தி வைக்கும் மாயாவி பரம்பொருளேயாம்.
- ஸ்வேதஷ்வதார உபநிடதம் 4/10.
எனினும் இந்த மாயையினால் பரமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவன் சத்வ குணத்தினால் நிறைந்தவன். அவனிடம் 'நான், எனது' எனும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. அவனிடத்தில் இருந்து பிரம்ம சைதன்யம் மறைவுபடாமல் திகழ்கிறது.

~~~~~~~~~~~~~
நாம் தியானிப்பதற்காக குருவாயூரப்பனின் வடிவழகை எடுத்தியம்புகிறது அடுத்த வரும் சுலோகங்கள்:

தசகம் 1: சுலோகம் 6

புதிய மழை மேகங்கள் போலும்
புதிதாய் பூத்த காசாம்பூ மலர்கள் போலும் 
அழகாய்த் திகழும் குருவாயூரப்பனே,
நல்லவைகளின் 
முழுவடிவமாம்,
இலக்குமியின் இருப்பிடமாம்.
 
அழிபொழியாய் இதயமதில் அருள்பொழிபவனே,
நின்னுருவை எப்போதும் தியானித்திடுவோமே.

தசகம் 1: சுலோகம் 7
மாயைகளைத் தாண்டிய மாயவனே, 
முன்னம் நினைத்தேன் புரியாத புதிர் உன் செயலென்று.
 
மாந்தர் மாயையில் சிக்க துயர் பல ஏன்பட வேண்டும்?

மானிடராய் பிறப்பதன் பயன் இப்போது அறிந்தேன். 
இல்லாமல் எப்படி எல்லையில்லா இன்பத்தைப் பருகிப்பின்
 அவ்வின்பத்தினை வெளிப்படுத்ததான் இயலும்? 
இத்தலத்தில் இவ்வடிவில் அந்த பிரம்மானந்தம்
 இருப்பது,
இனி எல்லாம் இன்பமயமன்றோ!



தசகம் 1: சுலோகம் 8
உன்னை வணங்கியவருக்கு
உன் வடிவினைக் காட்டுபவன் 
நீ.
கேட்காமலே வாழ்வின்
குறிக்கோளினை அடையக் கொடுப்பவன்.
 
இந்திரலோக சுகங்களை ஏங்கும் வீணர்கள்
 அறியார்
எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் 
பாரிஜாதம்
எம்தலைவன் ஹரியென்று.
 கணக்கிலா
பரிசுகளைத் தருபவன் நீயன்றோ.


தசகம் 1: சுலோகம் 9
கருணையை மட்டும் தரும் தெய்வங்கள் இருக்க,
தன்னையே தருபவன் தனித்துவமான குருவாயூரப்பன்!
உன்னருகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
தன்னொளியில் திளைப்பவர் கொடுத்து வைத்தவரே!
நின்னொளியில் திளைப்பது நீயுமல்லவோ!
கணக்கிலா நன்னெறிகளின் இருப்பிடமே,
சுரசேனையின் தலைவனே, உனக்கு வணக்கங்கள்!

தசகம் 1: சுலோகம் 10உயர்தலைவா, முரனை வதம் செய்தவனே,
சங்கரன் முதல் எல்லா தெய்வங்களையும் ஆள்பவனே,
எல்லா வலிமைகளையும் விட வலிவானவான் நீ.
குறையற்ற நின்புகழை துறந்தோரும் பாடுவர்.
திருமகளை எப்போதும் நின்திருமார்பில் கொண்டவனே,
எல்லாம் அறிந்தவனே, பற்றுகளற்ற குருவாயூரப்பனே,
பகவன் என்ற போற்றுதலுக்கு உரிய முதல்வன் நீ மட்டுமே.